இடுப்பு நோவும் வேலைப் பழுவும் | Low Back Pain and Work Overload

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இடுப்புப் பிடிப்பு (Low Back Pain) , சாதாரணமாகச் செய்யும் வேலையாலும் வரலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவும், நாள் பூராகவும் மேசையிலிருந்து வேலை செய்பவர்களுக்கும், உதாரணமாக, லிகிதர் வேலை, கணனியில் (computers) வேலை செய்பவர்கள், ரேடியோ Radio), கணனி (Computer), மணிக்கூடு (Watches) திருத்துபவர்கள், இதே நிலமையென்றால் உங்களால் நம்பத்தான் முடியுமா?

“அசையாமல் இருந்தால் பிடிக்கும் பிடிப்பும், அசைவதால் விலகும் பாரீர்” என்பதை நம்புங்கள்.

“இடைக்கிடை அசைவும் இடப்பின் இடுக்கனை விலக்கும்”

இவற்றை நம்புவோம். நன்மையைக் காண்பீர். நலமே பெறுவீர்.

அனேகமானோர் நீங்கள் உங்களுடைய வாழ்நாளில் ஒரு சிறிதளவு இடுப்பு நோவிலாவது (Low back Pain) அனுபவித்து அவதிப்பட்டிருப்பீர்கள். சிலசமயம், இரவு கட்டிலில் அல்லது நிலத்தில் கூடநேரம் படுத்திருந்து விட்டு விடிய எழும்பும் போது இடுப்புப்பிடிப்போடுதான் எழும்பியிருப்பீர்களல்லவா?

அப்போது என்னவாக இருக்கும் என்றால், கீழே நிலத்தில் படுத்தவர்கள் குளிர் என்று சொல்லுவார்கள்.

அதிக நேரம் கோணலாகப் படுத்ததால் இடுப்புப் பிடித்திருக்குமென மீதியானவர்கள் சொல்லுவார்கள்.

இதைவிட இன்னமும் குறிப்பாக, பாரமான வேலை செய்பவர்கள், சரியான பாரம் தூக்கியதால் வந்தது என்று சொல்லுவார்கள்.

இப்போது எமக்கு ஒருசில ஆனால் முக்கியமான காரணங்கள் எமக்குத் தெரியும் அல்லவா.

அப்போ நாங்கள் அவற்றிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்று எமக்குத் தெரிகிறது போல இருக்கின்றதா?

ஆம் உண்மைதான்.

1. அநேக நேரம் இருந்து வேலை செய்பவர்களுக்கு

  • இவர்கள் கதிரையில் இருக்கும் போது, சரியாக, நன்றாக பின்னுக்குச் சாய்ந்து இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது, உங்களது இடுப்பைக்கேற்றவாறு கதிரை நன்கு வடிவமைக்கப்பட்டதாகவும் அது உங்களது இடுப்பை தாங்கிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  • உங்களது பின் பக்கற்றில் பேர்ஸ் (wallet) அல்லது கையடக்கத் தொலைபேசியை (mobile phone) வைத்திருந்தால் அதனை அகற்றிவிட வேண்டும்.

  • உங்களது தொடை (thigh) கதிரையின் நன்கு பதிந்து இருக்க வேண்டும் அத்துடன், அவைகள் நிலத்திற்கு சமாந்திரமாகவும் (parallel) இருக்க வேண்டும். இவ்வாறு உங்கள் தொடையானது கதிரையில் வடிவாக பதியுமென்றால் உங்கள் உடலின் பாரமானது உங்கள் தொடையானது தாங்கிக் கொள்ளும். இதனால், உங்களுக்கு இடுப்பினில் ஏற்படும் தாக்கங்கள் குறைவாக இருக்கும்.

  • தொடர்ந்து கதிரையினில் இருந்து கொண்டிருக்காமல் குறைந்தது மணித்தியாலத்திற்கு ஒருமுறையாவது எழும்பி அங்கிங்கு உலாத்த (நடக்க) வேண்டும். இதுவும் உங்களுக்கு ஏற்படும் உடல் நலன்களினை மேம்படுத்தும்.

2. பாரமான வேலை செய்பவர்களுக்கு

  • அதிக பாரம் தூக்க வேண்டுமென்றால், (அதுவும் உங்களால் முடியுமென்றால் மட்டும்தான் தூக்க வேண்டும்) இல்லாவிடில் முளங்க் இரண்டையும் மடித்து (அரைமண்டியில்) இரண்டு கைகளாலும் அப்பழுவினைத் தூக்க வேண்டும். அத்துடன் தூக்கும் பொருளை உங்கள் உடலுடன் அணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறைகளை நீங்கள் சரியாகவும், முறையாகவும் வாழ்க்கையில் பின்பற்றினால் இடுப்புப் பிடிப்பு உங்களை அண்டவே அண்டாது சுகத்துடன் வாழவகுக்கும்.

வாழ்க வளமுடன் - Live prosperously